Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் அடுத்து என்ன…?அமித்ஷா -அஜித் தோவல் ஆலோசனை…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்_லுடன் ஆலோசனை நடத்துகின்றார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.

Image result for Ajit Doval amit shah

இதில் உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா பங்கேற்றுள்ளார். சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அமித் ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றார்.காஷ்மீர் நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக அங்கே சென்று அங்குள்ள நிலவரங்களை கூறுகின்றார். அதே போல உளவுத்துறை, பாதுகாப்பு துறை மூலமாக வந்த தகவல் குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு அமித்ஷா சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |