நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும்.
செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30-ம் தேதி வரை முழு முடக்கம் தொடரும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கூடாது. வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது. செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறந்தவெளி கலையரங்குகள், திரையரங்குகள் செயல்பட அனுமதி.
செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு 9-12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம். செப்டம்பர் 21-ம் தேதி பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடந்த 50% ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம். மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத்தேவையில்லை. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை.மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.