ஒரு தடவை ரஷ்ய அதிபர் ஸ்டாலின். ஒரு கோழியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றார். அதனுடைய இறகுகளை ஒவ்வொன்றாக பிடிங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது எல்லா இறகுகளையும் பிடுங்கியபின் அந்தக் கோழியை கீழே எறிந்து விட்டார்.
சிறிது நேரத்திற்குப் பின்,அந்தக் கோழி முன்னால் தானியத்தை தூவினார் .கோழி அந்த தானியத்தை சாப்பிட்டபடியே அவரிடம் வந்தது .இன்னும் கொஞ்ச தானியத்தை அவர் கால் வரை தூவினார் .அந்த தானியத்தை பொறுக்கி கொண்டு கோழி அவருடைய காலடியில் விழுந்தது .அப்போது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் கூறினார் .இதுதான் அரசியல் .மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழியலாம் கடைசியில் தானியத்தை மாறி எதையாவது தூவினால் போதும் அவர்கள் நம்முடைய காலில் விழுந்து கிடப்பார்கள்
இது உண்மை!
அரசியலில் மட்டுமல்ல ,குடும்பங்களில்,உறவுகளில், நட்பு வட்டாரத்தில் இந்த அநியாயம் நடக்கிறது. நம்மளை கேலி பண்ணுகிறார்கள். கஷ்டப்படுத்துதுக்கிறார்ககள், அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நம் கை காலை பிடிக்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் எப்படி இருக்கிறோம் அவர்களைப் போல முன்னாடி நடந்ததை சொல்லிக்காட்டி அவர்களை பழிக்குப் பழி பண்ணுகிறோமா? அல்லது மதிப்பை காட்டுகிறோமா? நீங்கள் எனக்கு என்ன செய்தாலும் பரவாயில்லை .நான் உங்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் .சொல்லில் மட்டுமல்ல நம் செயலில் காட்ட வேண்டும் .அப்பொழுது அவர்களுடைய மனசு மாறும்.
“மனிதருடைய தப்பிதங்களை நீங்கள் மன்னிக்காது இருந்தால் கடவுள் உங்கள் தப்பிதங்களை மன்னிக்க மாட்டார்”