Categories
மாநில செய்திகள்

வாடகை தாய் முறை என்றால் என்ன….? இதற்கு சட்டம் சொல்லும் விதிமுறைகள் என்னென்ன…..? இதோ சில தகவல்கள்….!!!!

பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாராவும்-விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றடுத்துள்ளனர். இவர்களுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக நயன் மற்றும் விக்கிக்கு திருமணம் நடந்த நிலையில் நான்கு மாதத்தில் எப்படி குழந்தை என பல்வேறு தரப்பினும் கேள்வி எழுப்பி வருவதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்தார்களா இல்லையெனில் தத்தெடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் தான் தற்போது வலுத்துள்ளது. இந்நிலையில் வாடகை தாய் என்றால் என்ன என்பதும், அதற்காக பின்பற்றப்படும் சட்ட விதிமுறைகள் குறித்தும் தற்போது பார்க்கலாம். குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பொதுவாக கணவன்-மனைவி இரண்டு பேருக்குமே பெரும் கனவாக இருக்கும்‌.

ஆனால் சிலருக்கு குழந்தை பாக்கியம் கைகூடாமல் போவதால் வாடகை தாய் முறையை தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது ஒரு பெண்ணின் கருமுட்டை மற்றும் ஒரு ஆணின் விந்தணு ஆகியவற்றை சேர்ந்து அந்த தம்பதிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள முன்வந்த பெண்மணியின் வயிற்றில் செலுத்தப்படும். அந்தப் பெண்ணுக்கு பத்து மாதங்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் உட்பட அனைத்து செலவுகளையும் கணவன்-மனைவி செய்வதோடு அடுத்த 3 வருடத்திற்கு மருத்துவ காப்பீடும் வழங்க வேண்டும். இந்த வாடகை தாய்முறையில் தற்போது பல்வேறு விதமான குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

ஒருவேளை மருத்துவ ரீதியாக பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன பிறகு தங்களுக்கு இருக்கும் மருத்துவ பிரச்சினைகள் குறித்த சான்றிதழை சமர்ப்பித்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை முன்கூட்டியே கூற வேண்டும். அதோடு வாடகை தாய்முறையில் பெற்றுக் கொடுக்கும் பெண் அந்த தம்பதிக்கு உறவினராக இருக்க வேண்டும். அதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்மணிக்கு 25 வயது முதல் 35 வயதுக்குள் இருப்பதோடு, ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் பெண்மணி மட்டும்தான் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். திருமணமாகாத மற்றும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்து கொடுக்கக் கூடாது. அதன் பிறகு வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த குழந்தையை தம்பதிகள் எந்த காரணத்தை கொண்டும் கைவிடக்கூடாது.

மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்த தம்பதிகளுக்கு முதலில் குழந்தை இருக்கக் கூடாது. இதனையடுத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்ணுக்கு 23 வயது முதல் 35 வயது இருக்க வேண்டும். இதேபோன்று ஆண்களுக்கு 21 வயது முதல் 55 வயது இருக்க வேண்டும். இந்த வயதுடைய கணவன் மனைவியிடம் இருந்துதான் கருமுட்டை மற்றும் விந்தணுவை சேமிக்க வேண்டும். மேலும் இப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் பல்வேறு விதிமுறைகள் இருக்கும் பட்சத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இந்த விதிமுறைகளை பின்பற்றினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் தமிழக அரசு அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |