Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தடுக்க நடவடிக்கை என்ன ? மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 

இந்தியாவில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லி , தமிழகம் உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் என 60க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை  போது கொரோனா வைரஸ் பதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அறிக்கை அறிக்கை மத்திய அரசு , டெல்லி மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Categories

Tech |