சிமெண்ட் மூட்டை விலையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிமெண்ட் மூட்டைகளின் விலை அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஒரு சிமெண்ட் விலையை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சிமெண்ட் மூட்டை விலை 70 ரூபாய் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.