கொரோனாவின் பிறப்பிடம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வுகாண் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதுமாகப் பரவி மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் 2019 ஆம் வருடம் இறுதியில் வுகானில் உள்ள மார்க்கெட்டில் பரவ தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் உருவாகவில்லை என்று அந்நாட்டின் தரப்பில் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா உருவானது குறித்து ஆய்வு செய்ய சீனாவிற்கு செல்ல உலக சுகாதார மையம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தது.
இதையடுத்து உலக சுகாதார மையத்தின் நிபுணர்குழு ஜனவரி 14ம் தேதி நேரடியாக வுகானுக்கு செல்லும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த குழுவில் மொத்தம் பத்து ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இவர்கள் அனைவரும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே நிபுணர் குழு ஆய்வு செய்ய சீன அரசு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர் குழுவின் விசாரணை கடந்த வாரம் தொடங்க இருந்தது ஆனால் சீனா இதற்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் திட்டம் தள்ளிப்போனது. இந்த ஆய்வுயாரையும் குறை கூறுவதற்காக நடைபெறவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.