செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமப்புறங்களில் இருந்து மாணவ, மாணவிகள் இலவச சைக்கிளை வைத்துக் கொண்டு தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு வந்தார்களா? அரசு பள்ளி கல்லூரிக்கு வந்தார்களா? 10,000பள்ளி கட்டிடம் இடிகின்ற நிலையில் இருக்கிறது என்று பேட்டி கொடுத்தது நானா? பள்ளி கல்வித்துறை அமைச்சரா? 10 மாணவர்கள் படிப்பதற்கு பள்ளிக்கூடம் நடக்குதல்லவா, ஏன் எண்ணிக்கை குறைக்கிறது?
கேரளாவில், டெல்லியிலும் ஏன் எண்ணிக்கை கூடுகிறது? ஏனென்றால் அவர்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, கட்டிடத்தை மாற்றி, தரத்தை உயர்த்தி நட்சத்திர விடுதி போல அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்துவிட்டார். நீங்கள் அதை செய்யாமல் தனியார் பள்ளி கல்லூரி நடத்துவதே, அரசை ஆளுகின்ற அமைச்சர்களாக இருக்கிறீர்கள். அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவிட்டால், தனியார் பள்ளிகளில் குவிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
அப்போது உங்களுடைய வசூல் போய்விடும். ஒரு தனி முதலாளியால் கொடுக்க முடிகின்ற தரத்தை,8 கோடி மக்களால் நிறுவப்பட்ட ஒரு அரசாங்கம் கொடுக்க முடியவில்லை என்றால், அரசு தன் தோல்வியை ஒத்துக் கொள்கிறதா? எதற்கு அரசாங்கம் ? உலகத்தில் அரசு நடத்துகின்ற எல்லாமே தரமாக இருக்கிறது மற்ற நாடுகளில். இந்த நாட்டில் என் தரம் இல்லை,
நாங்கள் சைக்கிள் கொடுத்தோம் அதை வைத்து வருகிறார்கள் என்று, மாணவர்கள் எங்கே இதை வைத்துக் கொண்டு எங்கே வருகிறார்கள், சைக்கிளை கூட வாங்க முடியாத நிலைமையில் ஏன் வைத்தீர்கள்? ஒரு சைக்கிள் என்ன விலை ? அதைக்கூட வாங்க முடியாத நிலையில் என்னை ஏன் வச்சீங்க ? என்ன ஆட்சி முறை இது. பேக் கொடுத்தோம்னு சொல்லுறீங்க ? என கேள்வி எழுப்பினார்.