மனைவிகள் , பெரும்பாலும் கணவர்கள் நல்லவர்கள், பிற பெண்களை மனதால் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில ஆண்கள் அப்படி இருப்பதில்லை. இதனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை. திருமணமான ஆண்களில் சிலர் தன் மனைவியை விட்டு வேறு பெண்களை நாடி செல்லவது இப்பொழுது சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இதற்க்கு காரணம் இருவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததாலும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் பொழுதே மற்ற பெண்களை தேடி போகிறார்கள்.
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும். ஆனால் இந்த நவீன காலத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கையாக தான் இருக்கிறது. முதலில் ஆண்கள் ஏன் மனைவியை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை பார்ப்போம். திருமணமான புதிதில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகி கொண்டே செல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாமல் போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
தாம்பத்தியம் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தபட்டதும் கூட, இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை. மனைவிமார்களே, உங்களது விருப்பு வெறுப்பு எதுவாயினும் உங்கள் கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இப்படி வெளிப்படையாக நீங்கள் உங்கள் கணவரிடம் பேசும் போது உங்கள் மீதான அன்பு மேலும் அதிகரிக்கும். அப்பொழுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல, இவ்வாறு இருப்பதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணம்.
அதுவே வேறொரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாறவே செய்கிறது. இது காலப் போக்கில் காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் மனைவிமார்கள் குழந்தைகளை கவனிப்பதற்க்கும் , வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை வெறுப்பை ஆக்கி விடுமாம்.