Categories
தேசிய செய்திகள்

எல்லாம் விதி ….. என்னத்த சொல்ல ….. ஜாமீன் கிடைச்சுருச்சு…. ஆனாலும் சிறை தான் …!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தை பீட்டர், இந்திராணி முகர்ஜி ஆகியோர் தொடங்கினர். இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில், ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயரையும் சிபிஐ சேர்த்து வழக்கு பதிவு செய்தது.

 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 20ஆம் டெல்லி நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் செப்டம்பர் 5ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வரை அவர் தண்டனை பெற்று வருகின்றார்.

 

சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதில் பிணை தொகை 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தது.

ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் , அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த ஜாமீன் ப.சிதம்பரத்திற்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. ஏன்னென்றால் இந்த ஜாமீனால் ப.சிதம்பரத்திற்கு உடனடி பலன் கிடைக்காது.காரணம் அவர் ஏற்கனவே அமலாக்கத்துறை கைதில் இருக்கிறாரார். இதனால் இந்த ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |