Categories
தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை?… இன்று தீர்ப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

உச்ச நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் குறித்த ஒரு சர்ச்சை செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பியதாக பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து  பூஷன் கருத்து தெரிவித்திருந்ததை, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.

மேலும் இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் அவரை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது.ஆனால் பிரசாந்த் பூஷண் மன்னிப்புக் கேட்க முடியாது என்று மறுத்து விட்டதால் உச்சநீதிமன்றத்தில் அவருக்கான தண்டனை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது அந்த வகையில் தற்போது பிரசாந்த் பூஷண் தண்டனை விபரம் இன்று வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |