Categories
அரசியல்

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்(நவ.,7) கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் என்ன….? இதுகுறித்து சில முக்கிய தகவல்கள் இதோ…!!!

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 7ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவதை தவிர்க்க  நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இது உலகளாவிய ஒரு முன் முயற்சி ஆகும். இது மரணத்திலிருந்து பல மில்லியன் கணக்கிலான உயிர்களை பாதுகாக்கிறது.

இதற்காக ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த நோய் பற்றிய கல்வியை வழங்குதல் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இது போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை இந்த தினம் குறிக்கிறது. அவசர நிலையை சமாளிக்கவும், நோயை கட்டுப்படுத்துவதிலும் நம்முடைய பங்கு என்ன? என்ற முக்கியமான தகவல்களை பரப்புவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் இந்த தினத்தில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நோய் குறித்து தவறான எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் புற்றுநோயை சுற்றியுள்ள கட்டுக் கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணுதல், சரியான சிகிச்சை பெறுதல் மற்றும் இறப்பு விகிதங்களின் எண்ணிக்கை குறைப்பது குறித்து மக்களுக்கு கற்பிப்பதை இதன் முக்கியத்துவமாக கொண்டுள்ளது.

Categories

Tech |