Categories
கால் பந்து விளையாட்டு

#ENGvNZL : என்னது..! இதுலயும் பவுண்டரி கணக்கா? #RWC2019 …!!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப்போட்டியில் நடப்புச் சாம்பியனான நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இத்தொடரில் இதுவரை நியூசிலாந்து அணி

  • இந்தாண்டு உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டியில் வெற்றியையும் நடைபெறாத ஒரு போட்டியில் சம புள்ளிகளையும் பெற்றது. போட்டிகள் முடிவடைந்து 16 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி பட்டியலில் முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.
  • அதன்பின் காலிறுதி ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி 46-16 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Image result for rugby world cup 2019 image

இத்தொடரில் இதுவரை இங்கிலாந்து அணி

  • இந்தாண்டு உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி மூன்று போட்டியில் வெற்றியையும் நடைபெறாத ஒரு போட்டியில் சம புள்ளிகளையும் பெற்றது. போட்டிகள் முடிவடைந்து 17 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி பட்டியலின் முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.
  • அதன்பின் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 40-16 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தற்போது இவ்விரு அணிகளும் லீக் சுற்று, காலிறுதிப் போட்டிகளில் சமபலத்துடனே வென்றிருப்பதால் இன்றையப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது. அதேபோல் தற்போது ரக்பி விளையாட்டிலும் இங்கிலாந்து அணிக்கு ஜாக்பாட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |