கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா. இவருடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்பிறகு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர்கள் என்டி ராமராவ் மற்றும் ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே படமாக வந்த நிலையி,ல் தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறும் படமாக வர இருக்கிறது. இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய வாழ்க்கை படத்தை எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை.
ஆனால் கட்சியினர் தான் மிகவும் விருப்பப்படுகிறார்கள். என் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி தான் சித்தராமையாவின் வேடத்தில் நடிக்கப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், கூடிய விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த தேர்தலுக்கு முன்பாக சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்து வெளியிட்டால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும் என்று கட்சியினர் வாழ்க்கை படத்தை எடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.