மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, உனக்கு என்னடா இங்கே வேலை ? உன் பாசை வேறு, எங்கள் பாசை வேறு. உன்னுடைய உணவு வேறு, எங்களுடைய உணவு வேறு. உங்களுடைய மொழி வேறு, எங்களுடைய மொழி வேறு. உன்னுடைய கலாச்சாரம் வேறு, எங்களுடைய கலாச்சாரம் வேறு. மரியாதையாக ஓடிப்ப. நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராகி விட்டோம்.நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்ற போராட்டம்.
இது சாதாரணம் போராட்டம் அல்ல. நம்முடைய உயிர்களை பழி வாங்குகின்ற போராட்டம். ஆனால் உயிர் நமக்கு வெள்ளம் அல்ல, நான் வீரர்களை அழைக்கிறேன், வீணர்களை அல்ல. வீட்டுக்கும், சிறைச்சாலைக்கு வித்தியாசம் தெரியாத தியாகச் சீலர்களை அழைக்கிறேன், சட்டசபை பொம்மைகளை அல்ல. நான் அரசியல் சட்டத்தை கொளுத்தா விட்டால், இவன் வீறு கொண்டு பேசுகின்றான், வேங்கை போல கர்ஜிக்கின்றான், சிங்கம் போல கர்ஜிக்கிறான் .
ஆனால் பதவி பறிபோகும் என்று சொன்ன உடனே பயந்து ஓடிவிட்டான் என்று நாலு பேர் சொன்னால் அப்போது திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் எவ்வளவு வெட்கப்படுவார்கள் ? வேதனைப்படுவார்கள். அதை நான் எண்ணித்தான், நான் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி, சட்டத்தை கொளுத்துகிற போது நான் சொன்னேன்… என் கையில் இருப்பது இந்தியாவின் அரசியல் சட்டம். அதனுடைய பதினேழாவது பிரிவு. அதற்கு நான் தீயிடுகிறேன், அதற்கு பிறகு நீதிமன்றத்திலே நீதிபதி கேட்டார்,
நீங்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினீர்களா என்று ? ஆமாம் நான் கொடுத்தேன், கொளுத்துனேன். இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை கொளுத்தினேன் என்று நான் நீதிபதிக்கு முன்னாலேயே சொன்னேன். ஆனால் அந்த நீதிபதி மனசாட்சி உள்ளவர். தமிழ் உணர்வு மிக்கவர், என்னை விடுதலை செய்துவிட்டார் என தெரிவித்தார்.