பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது எல்லைக்குள் மீன்பிடிப்பது என்ன நீதி என்றும் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை , புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மொத்தம் 13 கடற்கரை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 500 விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீன்பிடி தடை காலம் தொடங்கி நடைபெற்றுவருவதால் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? என கமலஹாசன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.