கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்று மையமாக உள்ளது என கெருகன்பாக்கம் வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெயசீலன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என குறிப்பிட்டுள்ளார். சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவ அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.