ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மோசடி செய்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விட ஓட்டலிலேயே அதிகம் சாப்பிடுகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மக்கள் யாரும் அறிவதில்லை. வீடுகளில் சமைத்து உண்ணும் உணவே பெரும்பாலும் நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
மேலும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் நிறைய மோசடிகள் செய்து வருகின்றன. இந்நிலையில் பிரபல உணவு டெலிவரி செயலி ஒன்றில் “Bonless Egg Curry” ஒன்ற உணவு ஒன்று இடம்பெற்றிருந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முட்டைக்கு எங்கே எலும்பு இருக்கிறது? முட்டை ஒன்றை வைத்து சமைத்து அதற்கு புதிதாக பெயர் வைத்து அதற்கு ரூபாய் 170 தொகை நிர்ணயித்து மோசடி செய்வதாக நெட்டிசன்கள் விமர்சித்ததுடன் கலாய்த்து வருகின்றனர்.