Categories
உலக செய்திகள்

அதென்ன புதியவகை கொரோனா…? அதிக ஆபத்தானதா அது..?

கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றை அளிக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இறுதிகட்ட வளர்ச்சியில் வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் புதியதாக ஒரு வைரஸ் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது என்று அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்று என்றால் என்ன? இது ஆபத்தானதா? இதுகுறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.ஒரு பிறழ்வு என்பது வைரஸின் மரபணு வரிசையில் மாற்றம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடக்கிறது. அரசின் புதிய தீர்வு மிக விரைவாகவும், எளிதாகவும் பரவக்கூடும் என்று இங்கிலாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் இறப்பு விகித அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் லண்டனில் கிறிஸ்மஸ் பண்டிகை ரத்து செய்யப்பட்டாலும் புதிய நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கொரோனா வைரஸை விட புதிய வகை வைரஸ் புதிய ஆபத்துக்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த புதிய வகை கொரோனா அதிக இழப்புக்கு வழிவகுக்கும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கவில்லை என்று இங்கிலாந்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தற்போது கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் தடுப்பூசிகளும் இதனால் பாதிக்கப்படுமோ என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றது.

பிறழ்வு மிகவும் ஆபத்தானது என்பதை அறிய பிறழ்வு குறித்து சோதனை நடத்தப்படும் வரை காத்திருக்க வேண்டும். புதிய வகைகள் எப்போதும் மோசமான விஷயமாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இருப்பினும் இது விரைவாக பரவினால் அதிகமான மக்கள் நோய்வாய் படுவார்கள். இதற்கிடையில் பிரிட்டிஷ் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் பேசியபோது “நாட்டின் கொரோனா வைரஸ் காரணமாக நிலைமை கட்டுக்குள் இல்லை, துரதிர்ஷ்டவசமாக புதிய திரிபு கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கள் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்று கூறினார்.

Categories

Tech |