Categories
மாநில செய்திகள்

என்னாது!… 100 மெடிக்கல் கல்லூரிகளில் ஒன்னு கூட தமிழகத்துக்கு கிடையாது…. பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு 100 மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதோடு ஏற்கனவே இயங்கி வரும் 157 மருத்துவ கல்லூரிகளில் நர்சிங் கல்லூரிகளையும் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் 157 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு குறைந்தது 15 மருத்துவ கல்லூரிகளாவது ஒதுக்கி இருக்க வேண்டும். ‌ஆனால் கடந்த அதிமுக ஆட்சியின் முயற்சியின் பயனாக 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

அதன் பிறகு முதல் கட்டமாக 58 மருத்துவக் கல்லூரிகள், இரண்டாம் கட்டமாக 24 மருத்துவக் கல்லூரிகள், மூன்றாம் கட்டமாக 75 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டே இது தொடர்பாக நான் வலியுறுத்தி இருந்தேன். இந்நிலையில் 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை அடைய முடியவில்லை. எனவே தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 100 மருத்துவ கல்லூரிகளில் 7 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் தான் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

அதோடு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் தமிழக மாணவர்களுடைய அதிக அளவில் இருக்கிறது. கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து சரியான நேரத்துக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததும் தமிழக அரசுதான். எனவே தமிழகத்துக்கு மருத்துவக் கல்லூரிகளை பெறுவதற்கான அனைத்து விதமான தகுதிகளும் இருக்கிறது. மேலும் இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒதுக்கும் 100 மருத்துவ கல்லூரிகளில் 7 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |