Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என்ன ஃபோட்டோ எடுக்கிறாங்க”… பாகனிடம் புகார் கூறும் யானை… வைரலாகும் வீடியோ..!!

ஒரு யானை தன்னை கேமராவில் படம் பிடிக்கிறார்கள் என்று தனது பாகனிடம் கூறும் அழகான வீடியோ வைரலாகி வருகிறது.

இணையம் முழுவதும் விலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்று யானை தனது மகளுடன் விளையாடும் வீடியோ. தற்போது வைரல் ஆகி வருகிறது. கேமராவை பார்த்து வெட்கப்பட்ட யானை தன் பாகனிடம் புகார் அளிக்கும் ஒரு வீடியோ பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலை சேர்ந்த ஆண்டாள் என்ற பெண் யானை, தன்னை வீடியோ எடுப்பதாக கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் பாகனிடம் அந்த யானை புகார் கூறியது. அதன்பிறகு அந்தப் பானையை சமாதனம் செய்ய முயற்சிக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் விளையாடும் காட்சி மிகவும் அழகாகவும் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |