செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை, 2026க்குள் முழுமையாகமுடிங்க, அதற்கு முன்னதாக முதலாண்டு படிப்பதற்காக ராமநாதபுரத்தில் மெடிக்கல் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களை இங்கே அருகாமையில் சேர்த்து கொள்ளலாம் என்று சட்டமன்றத்தில் கேட்பதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார்கள், எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில இரண்டு கட்டிடங்களாவது முறைப்படுத்தி கொண்டு வர வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நிச்சயமாக மத்திய அரசு இதற்கான பணிகளை செய்யும், மாநில அரசு அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, என்ன அழுத்தம் கொடுக்கிறார்கள் கடிதங்கள் தான் கொடுக்கிறார்கள்.
நாங்கள் கொடுக்கின்ற கடிதங்களை தான் மாநில அமைச்சர் கொண்டு போய் கொடுக்கிறார், அதற்கு புகைப்படங்கள் வருகிறது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னார், இன்னும் ஆறு மாதத்தில் பணி ஆரம்பிக்கும் என்றார், மத்திய அரசு சொன்னது போல் அமைச்சர் சொல்லியிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா? நீங்கள் ஏதாவது கடிதம் அனுப்பி உள்ளீர்களா? ஏனென்றால் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறேன். மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, அதில் யாருக்கும் மறுப்பு இல்லை.
இன்னும் காலம் கடத்தாமல் இதற்கான தனிப்பட்ட ஒரு நிர்வாக அதிகாரி நியமித்து, அதற்கானசெயல்பாட்டினை செய்ய வேண்டும். கடந்த சட்டமன்றத்தில் கூட திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் விரிவாக்க பகுதிகள், எய்ம்ஸ் மருத்துவமனை, வடபழனியில் இருக்கின்ற காமராஜர் பல்கலைக்கழகம் அத்தனையும் பல்வேறு திட்டங்கள் பயன்படுகின்ற வகையில், மதுரை மாநகராட்சியினுடைய இணைக்கப்பட வேண்டும் என்கின்ற கேள்வியை வைத்தேன்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் சொன்னார், மாநகராட்சிக்கு எத்தனை வசதிகள் கிடைக்கிறதோ, எந்த வகையிலும் பாதாளசாக்கடை திட்டம் வந்தாலும், அத்தனையும் நீங்கள் சொல்கின்ற மூன்று பகுதிக்கும் விரிவாக எடுத்து செல்லப்படும் என்கின்ற உறுதி சட்டமன்றத்திலே அதிகாரபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். அதனால் இந்த தொகுதியை பொருத்தவரைக்கும் விமான நிலையம் விரிவாக்கத்தில், தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு 313 கோடி ஒதுக்கீடு இருக்கிறார்கள் என்று…
ஆனால் மதுரை விமான நிலையம் விரிவாக்க பகுதிக்கு முழுமையான அரங்கு எடுத்தாலும் கூட முழுமையாக இடம் கொடுக்கவில்லை என்று சொல்லி விரிவாக்க பணியை செய்வதற்கு தாமதப்படுத்துகிறார்கள். அதனால் கண்டிப்பாக எங்களை பொறுத்தவரை விமான நிலையம் விரிவாக்கம் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக வரவேண்டும் மதுரை மக்களுக்கு உதவ வேண்டும், பொருளாதாரத்துறை துறையில் பெருக வேண்டும் என்ற ஆசைபடுகிறோம் என தெரிவித்தார்.