பாஜக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக இருக்கிறது என கூறியுள்ளார். ஜனநாயகம் பற்றி பேச திமுகவினருக்கு என்ன உரிமை இருக்கிறது? நெருக்கடி காலத்தில் பாதிக்கப்பட்ட திமுக தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் ஓராண்டு சாதனை குறித்து தமிழக பாஜகவினருடன் காணொலி மூலம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
Categories