Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்ன செய்யுறது….. ”உலகம் முழுவதும் பரவுதே”….. கடுப்பில் பாஜக ….!!

தொடர்ந்து இழுப்பறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முடிவுக்கு வந்தது.

மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாஜக மற்றும் சிவசேனா முதல்வர் பதவியில் 2 1/2 ஆண்டுகள் பங்கீட்டுக்கொள்ள பாஜக ஒத்துக் கொள்ளாத நிலையில் கூட்டணி முறிந்து குடியரசு தலைவர் ஆட்சி அமுலாக்கியது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றது பாஜக. இதில் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் , துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றனர்.

சிவசேனா , காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இணைத்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் மகாராஷ்டிரா ஆளுநரின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சியினர் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. தன்னால் பெரும்பானமையை நிரூபிக்க முடியாது என்று எழுந்த நிலையில் துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதல்வர் , துணை முதல்வர் என பதவியேற்ற 4 நாட்களில் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பாஜக பதவியேற்ற போது அதிகாலை குடியரசு தலைவரின் ஆட்சியை அகற்றி  ஆளுநர் , உள்துறை அமைச்சர் , பிரதமர் , குடியரசு தலைவர் என பலரும் மேற்கொண்ட முயற்சி 4 நாட்களில் சீதைந்துள்ளது.

இன்று நடைபெற்ற இந்த நிகழ்வுகளை பாஜக சற்றும் எதிர்பார்த்து இருக்காது. இதனால் இன்று உலகளவில் பாஜக கட்சி பேசு பொருளாக மாறியுள்ளது.  குறிப்பாக #MaharashtraPoliticalDrama , #MahaThriller  , #ResignFadnavis , #fadnavisresigns#FloorTest என்ற 5 ஹேஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. இதில் #MaharashtraPoliticalDrama , #MaharashtraCrisis , #MahaThriller என்ற ஹேஷ்டாக் உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

Categories

Tech |