Categories
தேசிய செய்திகள்

என்னது திருப்பதியில் லட்டு இல்லையா..? வெளியான பரபரப்பு தகவல்… விளக்கமளித்த தேவஸ்தானம்..!!

ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கொரோனா நெருக்கடி காலத்திலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் எந்த வகையிலும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி விடக்கூடாது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டாய முக கவசம் அணிதல், போதிய இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை பாதுகாவலர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

கொரோனா காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழலிலும் ஏழுமலையானுக்கு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் லட்டு பிரசாதத்தை கோயில் நிர்வாகம் தங்களுடைய பல்வேறு மாநில கிளைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்து வந்தது. கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு முதியவர்கள் கர்ப்பிணிகள் தவிர மற்ற அனைவரும் ஏழுமலையான் கோவிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வாய்ப்பும் வழங்கப்பட்டது.

மேலும் தேவஸ்தான நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய அனைத்து வயது பக்தர்களுக்கும் பின்னர் அனுமதி வழங்கினர். அனைவரும் சாமி தரிசனத்திற்கு ஏழுமலையான் கோயில் சென்று வருகின்றனர். ஏழுமலையான் கோவிலில் பொங்கல் உள்ளிட்ட மற்ற பிரசாதங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறியாத பக்தர்கள் சிலர் பிரசாதம் கேட்டுள்ளனர். அதற்கு இல்லை என்று தேவஸ்தானம் பதிலளித்துள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் கோயிலில் இனிமேல் பிரசாதம் வழங்கப் பட மாட்டார்கள் என்று தகவலை பரப்பியுள்ளனர். இதனை அறிந்த திருப்பதி தேவஸ்தானம் பணம் கொடுத்து பெறப்படும் திருப்பதி லட்டு பிரசாரத்திற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை, என்று தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளும் சேவைகளும் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர். சொர்க்கவாசல் திறப்பு தினத்தை முன்னிட்டு தினசரி 20 ஆயிரம் பேருக்கு சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் போலி இணையதளங்களை நம்பி டிக்கெட் புக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |