Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் …..!!

வருகின்ற பிப்ரவரியின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கின்றார்.

உலகின் தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கீழ் நோக்கு பார்வையில் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் இந்திய பொருளாதாரமானது  3.5% வளர்ச்சியை மட்டும்தான் அடைந்துள்ளது என்று அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.  காலகட்டத்தில் தான் நிதியமைச்சர் நீர்மலாசீத்தராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இதனால் நாடே உற்று நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றது. இந்திய பொருளாதாரம், இந்திய வணிகம் என அனைத்து சேவைகளும் இந்த பட்ஜெட்டை மிக மிக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இது போன்ற தருணங்களில் அரசு என்ன செய்ய வேண்டும் ?

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான நிலையான அரசு  இந்த பட்ஜெட்டில் சில பெரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதாவது அரசாங்கமானது  ஒரு லட்சம் கோடி முதலீடு  செய்யும்  உள்கட்டமைப்பு திட்டம் , இரயில்வே , ஏர்போர்ட்ஸ் , கிராமப்புற சாலைகள், கிராமத்திலே குளம் வெட்டுவது என பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக அரசு பெரிய முதலீடுகளை அறிவித்தால் அல்லது முதலீடு செய்தால் முக்கிய நிறுவனம் பங்கேற்கும் . அதாவது எளிமையாக சொல்லவேண்டுமென்றால்பண புழக்கம் இருக்க வேண்டும். பண புழக்கம் அதிகமாக இல்லாத போது தான் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருப்பதாக பிம்பம் தோன்றும்.

பொதுவாக பட்ஜெட் என்று வந்துவிட்டால் வருமான வரியில் சலுகை எதிர்பார்ப்போம். இதுவெல்லாம் சிறியஎதிர்பார்ப்புகள் தான். பட்ஜெட் என்பது ஒரு நிகழ்வுதான். தின பட்ஜெட் , மாதாந்திர பட்ஜெட் என்றெல்லாம் இருக்கின்றது. அடுத்த ஓர் ஆண்டுகளுக்கு அரசு என்ன செய்யப் போகிறது ? என்ன செய்யும் ? என்பதை கொண்ட ஒரு டாக்குமெண்ட்  தான் பட்ஜெட்.

இதில் தான் மக்கள் வருமானவரியை அரசு இன்னும் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.குறைக்க வேண்டியதில்லை , வருமான வரியை அதிகரிக்காமல் இப்படி வைத்துக் கொண்டாலே போதும். வருமான வரியை குறைப்பதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று கருதுகின்றார்கள். இதனால் பணப்புழக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

பண புழக்கத்திற்கு அரசாங்கமாக முன் வந்து முதலீடு செய்ய வேண்டும் .  வங்கிகள் விதிக்கும் வட்டி விதத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இது  பட்ஜெட்டால் முடியாது. ஆனால் பட்ஜெட்டால் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும்  ஏனைய எல்லா வங்கிகளுக்கு அரசு கேள்வி எழுப்பலாம். ஒரு வழிகாட்டல் கொடுக்கலாம் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

Categories

Tech |