Categories
தேசிய செய்திகள்

என்னங்க சார்…! இப்படி பண்ணுறீங்க ? ஹால்டிக்கெட்டில் சன்னி லியோன் ஆபாச படம்… கர்நாடகாவில் சலசலப்பு சம்பவம்…!!

ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தேர்வரின் ஹால்டிக்கெட்டில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது தேர்வர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கர்நாடகாவில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஒரு பெண் பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் அரை நிர்வாண புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து வேறு வழியில்லாமல் அவர் சன்னி லியோனின் புகைப்படத்திற்கு மேல் தன்னுடைய புகைப்படத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வுக்கு வந்து தேர்வு மையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தது. மேலும் இது பற்றி ஷிவ்மோகா சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |