கொரோனா பரவலை தடுக்க ஸ்டாலின் என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று கோவையில் செய்தியளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுவதாக தெரிவித்தார்.கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு குறித்து 16 முறை ஆலோசனை நடத்தி உள்ளேன் என்றும், மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார். 13 பேர் கொண்ட குழுவின் ஆலோசனை 3 முறை நடந்துள்ளது. தொழில்துறையினருடன் ஆலோசனை நடைபெற்றது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று அரசின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். ஆனால் சேலம் மாவட்டம் மட்டும் தான் முதலமைச்சர் கண்ணனுக்கு தெரிகிறதா? என ஸ்டாலின் கேள்வி கேட்கிறார். மற்ற மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தால் ஸ்டாலின் அதையும் குறை கூறுகிறார்.
அரசியலில் தான் இருப்பதை காட்டிக்கொள்ள தினந்தோறும் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் நோய் பரவலை கட்டுப்படுத்த இதுவரை எந்த உருப்படியான யோசனையையும் ஸ்டாலின் அரசுக்கு வழங்கவில்லை என பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி தலைவர் ஸ்டாலின் மட்டும் தான் என குற்றம் சாட்டியுள்ளார்.