வங்கி கணக்கில் பணம் செலுத்திய சூர்யாவிற்கு ரசிகர்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் பலர் வேலை இல்லாமல் இருந்து வருவதால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், திரை பிரபலங்களும், பல தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது. நேற்று மட்டும் அவர் 250 ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்த சூர்யா அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.