Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் செய்த காரியம்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் விஜய்க்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ரசிகர்கள்

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜயின் வீட்டிற்கு வந்த ரசிகர்கள் சிலர் வெளியில் நின்றபடி விஜய் அண்ணா, வெளியில் வாருங்கள் என்று கோஷமிட்டுள்ளனர். மேலும் சில ரசிகர்கள் பரிசு பொருட்களுடன் அவரது வீட்டின் முன்பு காத்துக் கொண்டிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்கள்

Categories

Tech |