மாநிலங்களவை மொழிகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பிராந்திய மொழிகள் பயன்பாடுகள் 5 மடங்காக உயர்ந்திருப்பதை கண்டறிந்தது.
டெல்லி மாநிலங்களவை, மொழிகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தது. அதில் 2018-2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிராந்திய மொழிப் பயன்பாடுகள் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்தது. ஹிந்தி,தெலுங்கு,உருது,தமிழ் ஆகிய மொழிகளுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் சமஸ்கிருதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
வெங்கையா நாயுடு 2017 ஆம் ஆண்டு மாநிலங்களவை தலைவராக பதவியேற்றார். அப்போது சபை உறுப்பினர்களுக்கு சமஸ்கிருதத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தி வந்ததால் தான் பிராந்திய மொழிப் பயன்பாடுகள் அதிகரித்தது. மேலும், மற்ற இந்திய மொழிகளின் பயன்பாடுகளும் ஐந்து மடங்காக (512)% அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான 33 அமர்வுகளின் போது, ஒரு அமர்வுக்கு 1.49 என்ற விகிதத்தில் 49 முறை பிராந்திய மொழிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டு விழுக்காடுகள் 512 ஆக அதிகரித்துள்ளது. மாநிலங்களவை மொழிகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில், பிராந்திர மொழிகளின் பயன்பாட்டு விழுக்காடு 512 மடங்காக உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.