நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் தளம்பாடியில் கூலித்தொழிலாளியான பொம்மநாயக்கர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் பொம்மநாயக்கர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.இதனையடுத்து இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பொம்மநாயக்கர் மயக்கமடைந்து இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நல்லிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.