Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்வது…..? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த ஏடிஎம் எந்திரங்களினால் வங்கியில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் கிழிந்த மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் அதை எப்படி மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது நீங்கள் எந்த ஏடிஎம் இயந்திரத்தில்  பணம் எடுக்கிறீர்களோ அந்த வங்கிக்கு சென்று கிழிந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் கிழிந்த நோட்டுகளை வங்கியில் கொடுக்கும் போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த தேதி, இடம், நேரம் மற்றும் அதற்கான ரசீது அல்லது செல்போனில் வந்த மெசேஜ் போன்றவற்றை கொடுக்க வேண்டும். ஒருவேளை ஏதாவது வங்கியில் பணத்தை மாற்ற முடியாது என்று கூறினால் அந்த வங்கிகள் மீது ரிசர்வ் வங்கியானது நடவடிக்கை எடுக்கும்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி நிறுவனத்தின் ஏடிஎம் இயந்திரங்கள் அதிநவீன முறையில் இருப்பதால் ரூபாய் நோட்டுகள் கிழிந்த முறையில் வருவதற்கு வாய்ப்பு கிடையாது எனவும், எந்த சூழ்நிலையிலாவது கிழிந்த நோட்டுகள் வந்தால் அதை அருகிலுள்ள எஸ்பிஐ வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை எஸ்பிஐ வங்கி தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |