Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இனி என்ன கவலை ? அதான் சொல்லிட்டாங்களே…! மகிழ்ச்சியில் மருத்துவர்கள் …!!

அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பினை  நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

தமிழக அரசு மருத்துவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால் ? தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் போது அரசு மருத்துவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. எந்தெந்த மருத்துவர்களுக்கு என்னவென்றால்… கடுமையான சூழ்நிலையை கூடிய பகுதிகள், மலை பகுதிகள், கிராம பகுதிகள் என மிகவும் பின்தங்கிய கிராமங்கள் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு அவர்கள் மேற்படிப்புக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் அதற்கான சிறப்பு இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கி வருகிறது.

சேவை மனப்பான்மையுடனும், கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கும் எளிமையான முறையில் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த விஷயம் வழங்கப்படுகின்றது என்று சொல்லப்பட்டது. இதற்கு எதிராக தனியார் மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவர்கள் அலுவலர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது தனியார் மருத்துவர்களும், அரசு மருத்துவர்களுக்கும் இடையே வேற்றுமையை, பாகுபாட்டை ஊக்குவிப்பதாக அவர்கள் வாதங்களை முன்வைத்து இருந்தார்கள்.

அதே போல இந்திய மருத்துவ கவுன்சில் மிக முக்கியமான வாதத்தை வைத்து இருந்தார்கள். இந்த மாதிரியான சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது எல்லாம் இந்திய மருத்துவ கவுன்சிலின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தனிப்பட்ட முறையில் மாநில அரசுகள் இதனை செய்ய முடியாது என்று அவர்கள் கூறி இருந்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை புறம்தள்ளிவிட்டு இத்தகைய சிறப்பு இட ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் எந்த வகையிலும் இதனை கட்டுப்படுத்தாது என்று ஒரு மிக முக்கியமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்கள்.

இதன் காரணமாக கிராமப்புறங்களில் சேவை மனப்பான்மையுடன் வேலை செய்யக்கூடிய சிறப்பு மருத்துவர்களுக்கு, இளம் மருத்துவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு மூலமாக மருத்துவ மேற்படிப்பு என்பது கிடைக்கும். ஆனால் இதற்க்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மருத்துவர்கள் 5 ஆண்டுகள் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் கட்டாயமாக பணி செய்திருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் தான் அவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கிடைக்கும்.

Categories

Tech |