இது தொடர்பாக கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய பொருளாதாரம் சற்று சரிவடைந்துள்ளதால் பெரும்பாலான நிறுவனங்கள் தடுமாறி உள்ளன. இது தற்காலிகமானது, இதில் இருந்து வெளிவருவதற்கான விரைவில் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் துறையும் சற்று சரிந்துள்ளது. ஆனால் இது நீண்ட கால சறுக்கல் இல்லை. 2018ஆம் ஆண்டு முதல் காலாண்டு முடிவில் 20.3 மில்லியன் விற்பனையான வாகனங்கள் 2019ஆம் ஆண்டு அதே காலாண்டு முடிவில் 17.1 மில்லியன் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
தற்போது ஆட்டோமொபைல் துறைகள் சற்று உயர்ந்து வருவதாக தெரியப்படுகிறது. இது வரை ஆட்டோமொபைல் துறையில் இருந்து வேலை இழப்பு குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.