பிகில் உட்பட தீபாவளி சிறப்பு காட்சி இரத்து செய்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர் விஜய், டேனியல் பாலாஜி, யோகி பாபு, பரியேரும் பெருமாள் கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.பிகில் படத்தின் ட்ரைலர் கடந்த 12_ஆம் தேதி வெளியாகி பல சாதனைகளை செய்தது. இந்நிலையில் தீபாவளிக்கு படம் வெளியாகுமென்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததது.
அந்த வகையில் நாளை மறுநாள் 25_ஆம் தேதி பிகில் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசுகையில் அதிக கட்டண வசூல் புகார் வருவதால் பிகில் படம் உட்பட எந்த படத்திற்கு பண்டிகைக்கால சிறப்பு காட்சி கிடையாது என்று அறிவித்தார். இது தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இந்நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது சிறப்பு கட்சி இரத்து குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் பண்டிகை காலங்களில் சிறப்பு காட்சிகள் என்ற பெயரில் அதிக கட்டண வசூல் செய்யப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் ,பொதுமக்கள் மிகுந்த பதிப்படைவார்கள் எனவே தான் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது பிகில்லாக இருந்தாலும் சரி திகிலாக இருந்தாலும் சரி தடை தடை தான் என்று அமைச்சர் தெரிவித்தார்.