அதிமுகவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன் மனம் திறந்து கூறியுள்ளார் முன்னாள் எம்பி மைத்ரேயன்.
சென்ற இரண்டு தினங்களாக அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் சேர போவதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக அவரிடம் கேட்ட பொழுது யாரோ ஒருவர் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புவதற்கு நான் பதில் சொல்ல முடியாது என கூறினார். அதேபோல தற்போது அதிமுகவில் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் எனக் கூறிய அவர் முன்பு இருந்த மனவருத்தங்கள் இப்பொழுது இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது சரியாகாது என்றும் அவர் கூறினார். மேலும் நான் எப்பொழுது பாஜகவில் இணைய போகிறேன் என்று வெளிவந்த அந்த செய்தியின்படி, நான் சேரவில்லை என்றால் அது பொய்யான தகவல் என்று மக்களுக்கு புரிந்து விடும், இவ்வாறு அவர் கூறினார்.