Categories
தேசிய செய்திகள்

பாஜகவா இருந்தா என்ன ? காங்.ஆ இருந்தா என்ன ? தெறிக்கவிட்ட கம்பீர் …!!

வடக்கு டெல்லியில் வன்முறைக்கு காரணமாக இருந்த கபில் மிஸ்ரா  மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கம்பீர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடக்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை அரங்கேறியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடுகின்றவர்கள் போராட்டத்தை முடிக்கவில்லை என்றால் போலீஸ்க்கு கூட பயப்படாமல் நாங்கள் களமிறங்குவோம் , போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜகவின் கபில் மிஸ்ரா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் போரட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பேரணி நடத்திய இவர் அமெரிக்க அதிபர் இருக்கும் வரை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் , அவர் போனது பாருங்கள் என்று பேசியதோடு வன்முறையை தூண்டும் வகையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதையடுத்து தான் அங்கு இருதரப்பினரிடையே மோதல் வெடித்து வன்முறையாகியது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுக்கடங்கா வன்முறையால் வடக்கு கிழக்கு டெல்லி பகுதயில் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , பாஜக சார்பில் வெற்றிபெற்ற டெல்லி கிழக்கு தொகுதி  மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் கூறுகையில் , கபில் மிஸ்ராவின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல.வன்முறைக்கு தூண்டினால் காங்கிரஸ் , ஆம் ஆத்மி , பாஜக யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது துரதிர்ஷ்டவசமானது.ஷாஹீன் பாக்  ஒரு அமைதியான எதிர்ப்பு. இதற்க்கு உரிமையுள்ளது. ஆனால் டிரம்ப் இங்கே இருக்கிறார், இங்கு வன்முறை போராட்டங்கள் நடக்கின்றன – இது நியாயமில்லை. கைகளில் கற்களை எடுப்பது நியாயமில்லை. ஒரு போலீசாருக்கு முன்னால் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் எப்படி நிற்க முடியும்?  என்று கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |