காங்கிரஸ் கட்சியின் எம்பியான ஜோதிமணி, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், நாற்காலிகள் காலியாக இருந்ததால், அவர் திரும்பி சென்றதற்கு பஞ்சாப் முதல்வர் எப்படி பொறுப்பாவார்? என்று கேட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பியான ஜோதிமணி தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் மாநிலத்திற்குள் வரவிடாமல் விவசாயிகள் தடுத்துள்ளனர். ஒரு வருடமாக கடுமையான குளிர் மற்றும் மழையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், 700 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும், அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்தார்.
இவை எதையும் விவசாயிகள் மறக்க மாட்டார்கள் என்று நரேந்திரமோடி உணர வேண்டும் என்று கூறியிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் அரசு, அவர்களின் பயணத்திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. மேலும், முதல்வரே நள்ளிரவு நேரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று கவனித்திருக்கிறார்.
இந்நிலையில், பிரதமர் பயணத்திற்கான திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், பிரதமர் கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்ததால், அவர் நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறார். பயண திட்டத்தை மாற்றியதற்கும், கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக கிடந்ததற்கும் பஞ்சாப் முதல்வர் எவ்வாறு பொறுப்பேற்கமுடியும்? என்று கேட்டிருக்கிறார்.