தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை படைத்தது.
இதையடுத்து, இவர்கள் இருவரும் ”தளபதி 67” படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளனர். இந்த படத்தின் முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் சம்பளம் வாங்கவில்லையாம். அதற்கு பதிலாக இந்த படத்தின் வியாபாரத்தில் ஒரு பங்கை சம்பளமாக வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்க்கு ஒரு ஷேர் கொடுக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளாராம். ஆனால், இது குறித்த உண்மை தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.