கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, நாங்க வாதத்துக்காக தொடர்ந்து வைத்தோம். ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியா முழுவதும் பயங்கரவாத செயலில் ஈடுபடுது என சொல்லி தான், UAPA சட்டம் திருத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கை எல்லா மாநில அரசு பார்த்தாலும் கூட, பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக்கு என்ற காரணத்துக்காக தான்,
பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகளை விசாரிப்பதற்கு ஒன்றிய ஏஜென்சியான NIA போன்ற நிறுவனங்கள் வந்தால் சரியாக இருக்கும் என்று சொல்லி தான், மாநில அரசு இருந்த ஸ்பெஷல் ப்ரோவிசனை கூட எல்லா மாநில அரசில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை விசாரிப்பதற்கு NIA என்ற அமைப்பு கொண்டு வரப்பட்டது.
2019ல் NIA விசாரணைக்கு முபின் உள்ளாகி இருக்கிறார் என்றால், 19 – 20 – 21இல் மூன்று ஆண்டுகளில் NIA ஏன் முபினை கண்காணிக்கவில்லை ? என்ற கேள்வியை நாங்கள் கேட்கலாம். ஆனால் தமிழ்நாடு காவல்துறையோ, தமிழ்நாடு அரசோ அந்த கேள்வியை கேட்க விரும்பல. ஏன்னா அந்த ஏஜென்சி மீதி இன்னும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. சில விஷயங்களை வெளிப்படையாக, நாட்டினுடைய இறையாண்மை கருதி, நாட்டினுடைய பாதுகாப்பு கருதி பேச முடியாது என்பதால் தான், ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் கடந்து போகின்றோம் என தெரிவித்தார்.