Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன யாதவ்.. ? உண்மையிலேயே நீ யார் தெரியுமா..! பேச்சால் பரபர பேச்சு!!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி நடந்திய ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், திமிரா இருக்கணும். அங்க நிலம் பள்ளமாக இருந்ததால்தான் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டமே ஒழிய, அது நம் குடிப்பெயர் அல்ல. நம் குடிப்பெயர் நாம் வேளாளர்கள். இதற்க்கு முன்பு உள்ள இடத்தில் நாம என்ன செஞ்சோம் ? நாம  ஏன் நம்ம உணவுக்கான பொருளை விளைய வைத்து சாப்பிடக்கூடாது என சிந்திச்சோம்.

இதுக்கெல்லாம் ஒரு பெருமை இருக்கு பாரு..  அந்த முல்லை நிலத்தில் ஆடு,  மாடு மெய்ச்சோம் அல்லவா…   அங்கே ஒன்று, இரண்டை  கண்டுபிடித்துவிட்டோம். உலகத்தில் ஒன்று,  இரண்டை கண்டுபிடித்தது நம்ம தான். நல்ல கவனிச்சுக்கணும்….  திருக்குறள்ல வள்ளுவ பெருமகனார் சொல்கிறார்… எழுத்தென்ப ஏனை எண்ணப என  எழுதல… எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என தான் எழுதினார்.

எழுத்துக்கும் முன்னாடி எண் வந்திருச்சு. எண் கண்டுபிடிச்சது ஆயர், கோன். ஆடு மாடுகளை எண்ணுவதற்கு ஒன்னு,  ரெண்டை  கண்டுபிடிச்சிட்டோம். போட்டு குழப்பிக்கிட்டு அலையாத… பேசுவதை விட்டு பாட நடத்த வேண்டி இருக்கு உனக்கு. அங்க முருகன். அந்த நிலத்தில் தலைவன் முருகன். கீழ வருகின்றோம். இந்த நிலத்தின் தலைவன் வேந்தன். மருத நிலத்தின் தலைவன் அவன் தான் இந்திரன் என்று அழைக்கப்பட்டான்.

இந்திரன்.  தேவ இந்திரன் அதுல இருந்து வந்தால் தேவர்கள் என்று நம்ம போடுகிறோம். இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் ? நாங்களும் அந்த நிலத்துப் பிள்ளைகள் தான். அதனால் நாங்கள் தேவேந்திரர் என சொல்லுறாங்க.  ரெண்டும் ஒன்னு தான். தேவர் என்று போட்டாலும் ஒன்னு தான்,  தேவேந்திரன் போட்டாலும் ஒன்னு தான். ஒரு தாய் பிள்ளைகளில் இவ்வளவு சண்டை. நம்ம 2 பேரும் ஒண்ணா நின்றால் எதிரிக்கும் உடையும் மண்ட. இதுதான் அடிப்படையில் இருக்கிற உளவியல் சிக்கல் இதுதான்.

திராவிடம் என்பது தமிழ் தேசத்தை பிளந்து, பிரித்து அதிகாரத்துக்கு வருவது. தமிழ் தேசியம் என்பது பிளந்து கிடக்கிற தமிழ் தேசிய மக்களை ஒன்றிணைத்து வலிமை பெறுவது அரசியல் அதிகாரத்துக்கு வரும். அதுதான் பிரபாகரன் பிள்ளைகளின் குணம். அது நல்ல கவனிச்சுக்கணும். இதை போட்டு குழப்பி விடக்கூடாது. அந்த அடிப்படையில் வந்த இனத்தின் மக்கள் நாம். அதனால் இனிவரும் தலைமுறை பிள்ளைகள்…. தமிழினத் தலைமுறை பிள்ளைகள்… பெயருக்கு பின்னாடி உனக்கு சொல்லனுமா ? நீ யாருன்னு கேட்டா நான் கோன் என்று சொல்லு,  பெருமையா சொல்லு.

இல்லன்னா ஆயர் என்று சொல்லு. ஆட,  மாடுகளை மேய்ப்பவர் ஆயர். அப்படித்தான் அழைக்கிறாங்க. கிறிஸ்தவ கோயில்கள் எல்லாம் இவர் மேய்ப்பவர் ஆயர் அப்படி சொல்றதுக்கு காரணம் அதுதான். நாம வந்து ஆயர். அது வந்து உனக்கு கம்பீர குறைவா இருக்கா ? கோன்னு சொல்லு. அரசன் என்று சொல்லு. போட்டு குழப்பிக்காத என தெரிவித்தார்.

Categories

Tech |