Categories
லைப் ஸ்டைல்

சம்பள உயர்வை கேட்கும் முன் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

சம்பள உயர்வை கேட்பது சுலபமானது இல்லை – அதனால் நீங்கள் கேட்கும் முன் உங்களை தயாரான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் சம்பளம் உங்களது வேலைக்கு ஏற்றவாறு இல்லையா? அல்லது உங்கள் பணியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முயன்று வருகிறீர்களா? அப்பொழுது அதை நீங்கள் கேட்கும் நேரம் வந்து விட்டது. ஆனால் நீங்கள் கேட்பது சரியாய், சம்பள உயர்வை பற்றி எப்படி கேட்க வேண்டும் என்ற குழப்பமா? அப்பொழுது நிச்சியம் இந்த கட்டுரையை படிக்க வேண்டும். உங்கள் நிறுவனத்திடம் உங்கள் சம்பள உயர்வை பற்றி பேசும் முன் நீங்கள் செய்ய வேண்டியவை..

1. உங்கள் சாதனைகளை பட்டியல் இடுங்கள்:

சம்பள உயர்வை கேட்பது சுலபமானது இல்லை – அதனால் நீங்கள் கேட்கும் முன் உங்களை தயாரான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏன் சம்பள உயர்வு வேண்டும்? உங்களது பணியின் ஆரம்பக்காலத்தில் இருந்து நீங்கள் பணியில் செய்த சாதனைகளை பட்டியல் இடுங்கள். சின்னதோ, பெரியதோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்த பங்கை தெரிவியுங்கள்.

2.கவனத்தை பெறுங்கள்:

புது பிராஜக்ட் அல்லது எதோ ஒரு வேலையை செய்ய தானாக முன் வாருங்கள். சில சமயத்தில் உங்களுக்கு பிடிக்காமல் நீங்கள் வேலை செய்யும் வார இறுதி நாட்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.

3. நிறுவனத்தின் நிதி நிலையை தெரிந்துக்கொள்ளுங்கள்:

உங்களுக்கு நீங்கள் பெரும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கிடைக்க வேண்டும் என்றால் கூட உங்களது நிறுவனத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு உயர்வை கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கு தேவையானது கிடைக்கும் அல்லது போதியதாக இல்லை என்றால் உங்கள் ரெசியும்-ஐ தயார் செய்து புது வேளைக்கு தயாராகுங்கள்.

Categories

Tech |