Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எது வந்து மோதுச்சுனே தெரியல…… அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ….. 2 பேர் மரணம்….!!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ  நொறுங்கிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை அடுத்த வயலூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான சண்முகம் ஆகிய இருவரும் சேத்துப்பட்டு சென்றுவிட்டு இந்தியாவில் ஒரு ஆட்டோ ஒன்றை பிடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆட்டோவை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அப்துல்கரீம் என்பவர் ஓட்டி கொண்டு வந்திருந்தார். அப்போது  செவளம்பாடி கிராமம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் ஆட்டோ மீது மோதி தள்ளி விட்டுச் சென்றது. இதில்,

ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஆட்டோ ஓட்டி வந்த அப்துல் கரீம் மற்றும் அதில் பயணம் மேற்கொண்ட முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க, படுகாயமடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின் இதுகுறித்து அவலூர்பேட்டை காவல்நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |