Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவங்க என்ன செஞ்சாலும் நாம டஃப் கொடுக்கணும்”…. CM ஸ்டாலினின் பலே வியூகம்…. வெற்றியை நெருங்கும் திமுக?….. ஷாக்கில் பாஜக..!!!!

தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவில் மொத்தம் 23 அணிகள் இருக்கிறது. இந்த 23 அணிகளின் மாநில நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட 6 குழுக்களின் உறுப்பினர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைவாக முடிக்க வேண்டும். அதன் பிறகு 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ஆ. ராசா, கனிமொழி எம்பி, பொன்முடி, ஐ. பெரியசாமி ஆகியோருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு அனைத்து அணிகளும் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதோடு, 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கான பணிகளை தற்போது இருந்தே மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். திமுக மற்றும் பாஜக கொடுக்கும் பொய் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் முறியடித்து திமுகவின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். பாஜக எப்படி கூட்டணி வைத்தாலும் அவர்களின் செயல்பாடுகள் மக்களிடம் எடுபடாது. பாஜகவின் செயல்பாடுகளை முறியடிக்கும் வகையில் திமுகவின் நிலைப்பாடு இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |