மறைந்த மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல் அமைச்சர் தான் நம்பர் ஒன். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர், சிறந்த நிர்வாகம் என்று இந்தியா டுடே போட்டு இருக்கு. இந்தியா டுடே ஒன்றும் திமுக பத்திரிகை அல்ல. இந்தியா டுடே நம்ம பத்திரிக்கையா ? நம்ம விளம்பரம் கொடுக்கறது இல்ல. நமக்கு தெரியவும் செய்யாது. ஆனா கரெக்டா போட்டிருக்கிறார்கள்.
ஆங்கில பத்திரிகை சரியாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கிறது என்று போட்டிருக்கிறார்கள். அது ஒன்னு போதாதா ? எங்க தலைவருடைய ஆட்சிக்கு, நிர்வாகத் திறமைக்கு என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இங்கே பேசுனவுங்க சொன்னாங்களே… சகோதரர் அண்ணாமலையை பற்றி பேசும் பொழுது…
நான் கேட்டுட்டே இருந்தேன். ஒன்று மட்டும் தோன்றியது. அவருக்கு பயங்கர கற்பனை வளம். அவர் கதை எழுதலாம். இலக்கியவாதி ஆகலாம் அவரு. ஏனென்றால் தலைவர் ட்ரெயின்ல வரும்பொழுது, ஒரு கதை பேசுகிறார்கள் 5 நிமிடம்… என்ன ஐயா ? ட்ரெயின்ல வரது தப்பா ? மோடி அங்கிருந்து தனி பிளைட்ல வருவார். அது தப்பு இல்லையாம். என் தலைவன் தென்காசிக்கு ட்ரெயின்ல போனா தாப்பாம்.
எவ்வளவு பித்தலாட்டத்தனம் பாருங்க. பொய்யை ஓயாம சொல்லிட்டு இருந்தா உண்மையாயிரும் மாதிரி… ஊருக்கு ஊரு மைக்குல போட்டு பேசிட்டு அலைகிறான். நீ அரசியலுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு. சுய விளம்பரம். நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என சொல்லுறன். நீ எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போ.. கொடுத்த IPS வேலையை செய்ய முடியாது என்று தானே ஓடி வந்த.
உன்னால IPSஆக செயல்பட முடியல. நீ நாட்டுக்கு சேவை செய்வ என்று உனக்கு பயிற்சி கொடுத்து, ஐபிஎஸ் ஆக்குனா நீ அங்க இருந்து தப்பி இங்க வந்து இருக்க என அமைச்சர் விமர்சனம் செய்தார். பொதுவாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனத்தை பெரியளவில் விமர்சிக்காமல் கடக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது., தூத்துக்குடியில் பாஜக – திமுக அரசியல் களம் சூடிபிடித்து, வார்த்தை போர் விவாதம் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.