Categories
டெக்னாலஜி பல்சுவை

Whats App பயன்படுத்தினால் இனி… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு தங்கள் பயனாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பயனாளிகள் அனுமதி மறுத்தால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வாட்ஸ்அப் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |