Categories
பல்சுவை

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… “இனி 1000 பேர் வந்தாலும் கவலை வேண்டாம்”…. வெளியான புதிய அப்டேட்….!!!!

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் இன்ஸ்டாகிராம் வெளியை போன்று எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தனி உரிமை பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் ரீட்ரெசிப்ட் மற்றும் மெசேஜ்களுக்கான புழு டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யும் ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களை காண்பிக்கும். அதனையும் பயனர்கள் மறைத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஆப் செட்டிங்ஸ் மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இன்டிகேட்டர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தலாம். எடிட் செய்யும் வசதியும் இனி வரவுள்ளது.

அதனை தொடர்ந்து whatsapp குரூப்பில் இணைக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 256 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 512 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் நபர்களின் எண்ணிக்கையை தற்போது மேலும் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதாவது இனி whatsapp குரூப்பில் அதிகபட்சமாக1024 வரை இணைந்து கொள்ள முடியும். முதலில் அந்த அப்டேட் whatsapp ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன்களில் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த அம்சம் அதிகமான பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாட்ஸ் அப் குழுக்கள் வணிக பயன்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |