சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இதில் நீதிபதி விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், .கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
Categories