தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது.
முதல்வரின் பயண திட்டத்தின் படி செப்டம்பர் 7 ஆம் தேதியோடு அவரின் அமெரிக்கப் பயணம் முடிந்து 8 மற்றும் 9_ஆம் தேதிகளில் துபாய் சென்று அங்குள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் 10_ஆம் தேதி சென்னை திரும்புகிறார். இதுதான் தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் அட்டவணையாக இருந்தது.ஆனால் தற்போது 7_ஆம் தேதி அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர் சென்னை திரும்பி விட்டு சென்னையிலிருந்து , மீண்டும் துபாய் செல்வார் என்று அமைச்சர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றது.
முதல்வர் இல்லாத நேரங்களில் இங்கு என்ன நடக்கின்றது என்று நடப்பு அரசியல் நிகழ்வு, அரசு நிர்வாக செயல்பாடு பற்றி அமைச்சர் தங்கமணி , அமைச்சர் வேலுமணி தமிழக முதல்வருடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். தங்கமணியும் தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதல்வருக்கும் ரிப்போர்ட் செய்து வருகிறார். அந்தவகையில் அமைச்சர் தங்கமணி அதிமுகவில் நடந்துவரும் அரசியல் நகர்வு , தமிழக பாஜகவின் தலைவர் மாற்றம் என அனைத்தையும் முதல்வர் காதில் ஊதியுள்ளார். அதோடு அமெரிக்காவில் இருந்து துபாய் செல்வதற்கு முன் தமிழகத்தில் தலையைக் காட்டிவிட்டு மீண்டும் துபாய் செல்லுங்கள் என்று தங்கமணி யோசனை சொல்லியிருக்கிறார்.